சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தலைமை செயலகத்தில் 12.12.2024 முதல் 19.12.2024 வரை சென்னையில் நடைபெறும் 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.85 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். தமிழ்நாடு அரசின் சார்பில், ஆண்டுதோறும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு ரூ.75 லட்சம் நிதயுதவி வழங்கப்பட்டு வந்த நிலையில், 2023ம் ஆண்டு ரூ.85 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது.
இந்த ஆண்டும் 12.12.2024 முதல் 19.12.2024 வரை சென்னையில் நடைபெறும் 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.85 லட்சத்திற்கான காசோலையினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் பொதுச்செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ.வி.எம்.சண்முகத்திடம் வழங்கினார்.
அப்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்பு துறையின் கூடுதல் இயக்குநர் அன்புச்சோழன், கூடுதல் இயக்குநர் (செய்தி) எஸ்.செல்வராஜ், இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் தலைவர் சிவன் கண்ணன் மற்றும் துணைத்தலைவர் ஆனந்த் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு சார்பில் ரூ.85 லட்சம் நிதியுதவி: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார் appeared first on Dinakaran.