சுனாமி, புயல் மற்றும் கள்ளக்கடல் நிகழ்வுகள் கடற்கரையோர மக்களின் வாழ்விலும், இந்திய துறைமுகங்கள் மீதும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளது ஐஐடி மெட்ராஸ். செங்கல்பட்டு மாவட்டத்தின் தையூர் எனும் கிராமத்தில் உள்ள இந்த ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடம் ஆசியாவிலேயே மிகப்பெரியது என ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.