சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொன்ற வழக்கில் வரும் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பைச் சேர்ந்த சதீஷும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு சத்யபிரியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சத்யப்ரியா சதீஷுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி, கல்லூரி செல்வதற்காக, பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, தாம்பரம் நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார்.
இந்த வழக்கில், சதீஷை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், இந்த வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரித்த இவ்வழக்கில் 70 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வரும் 27ம் தேதி மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு வரும் 27-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ஸ்ரீதேவி அறிவித்துள்ளார்.
The post சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொன்ற வழக்கில் வரும் 27-ம் தேதி தீர்ப்பு appeared first on Dinakaran.