சென்னை அம்பத்தூர் அருகே பாடி பகுதியில் உள்ளது முகப்பேர் சாலை. இச்சாலை, திருமங்கலம் – அம்பத்தூர் தொழிற்பேட்டை சாலையையும், மண்ணூர்பேட்டை – சி.டி.எச். சாலையையும் இணைக்கக் கூடியதாகும். சுமார் ஒன்றரை கி.மீ. தூரம் உள்ள இச்சாலை, பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
இந்த முகப்பேர் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளும், திருமண மண்டபம், கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள் உட்பட பலவகையான நூற்றுக்கணக்கான கடைகள் அமைந்துள்ளன. இச்சாலையை ஒட்டியுள்ள பாடி – சத்தியா நகர், குபேரர் தெரு, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் – கோல்டன் குடியிருப்பு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.