சென்னை: சென்னை மதுரவாயலில் கல்லூரி துணை பேராசிரியர் வீட்டின் கழிவறையில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். கல்லூரி துணை பேராசிரியர் பிரகார் குமார் கர்வார் தலையில் கவர் சுற்றியபடி கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பேராசிரியர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் பிரகார் குமார் கர்வார் 32 வயதான இவர் குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். சென்னை மதுரவாயலில் உள்ள வக்கீல் தோட்டம் என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
நேற்று மாலை முதல் இவரது மனைவி தொடர்ச்சியாக செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் இவர் செல்போன் அழைப்புகளை எடுக்காததால் அவரது நன்பரிடம் தகவலை சொல்லி அவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரையடுத்து போலீசார் அவர் வீட்டிற்கு சென்றனர். கதவை பலமுறை தட்டியும் திறக்கவில்லை பின்பு ஜன்னல் வழியாக பாத்தபோது கழிவறையில் தலையில் பிளாஸ்டிக் கவர் சுற்றியபடி இறந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக கதவை உடைத்து உள்ள நுழைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக கோயம்பேடு துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் தலைமையில் குழு அமைத்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையா? அல்லது தற்கொலையா? என சி எம் பி டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேராசிரியர் உடன் நெருக்கமாக பழகியவர்களிடம் விவரங்களை காவல்துறை சேகரித்து வருகின்றனர்.
The post சென்னை, மதுரவாயலில் கல்லூரி துணை பேராசிரியர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.