சென்னை: சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் 20 பேர் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவிற்கு 10% தள்ளுபடி கட்டணத்துடன் காகித பயணச்சீட்டாக வழங்கப்பட்டு வந்த குழு பயணச்சீட்டு பெறும் வசதி 1.3.2025 முதல் திரும்பப் பெறப்படுகிறது என்பதை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பயணிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறது.
டிஜிட்டல் பயணச்சீட்டுக்கு மாறுவதை எளிதாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதே குழு பயணச்சீட்டை பயணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் 20% தள்ளுபடி கட்டணத்துடன் பெற்று கொள்ளலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை மெட்ரோ ரயிலில் வழங்கப்பட்டு வந்த 10% தள்ளுபடி குழு பயணச்சீட்டு பெறும் வசதி நிறுத்தம்! appeared first on Dinakaran.