சென்னை: ஏற்கெனவே அறிவித்தபடி இன்று காலை சரியாக 6 மணிக்கு தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் ஹேஷ்டேக் கெட் அவுட் ஸ்டாலினை (#GetOutStalin) பதிவு செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
#GetOutStalin என்ற ஹேஷ்டேகை பதிவு செய்து அவர் பகிர்ந்த ட்வீட்டில், “ஒரே குடும்பத்தின் ஆதிக்கம், கரைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையம், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப் பொருள் மற்றும் கள்ளச் சாராயத்தின் புகலிடமாக மாற்றியது, கடனாளி மாநிலமாக்கியது, சிதிலமடைந்த கல்வித் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சமூகம், சாதி மதத்தை வைத்து பிரிவினைவாத அரசியல் செய்வது, மக்களுக்கு நல்லாட்சி வழங்கத் தவறியது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என்றிருக்கும் திமுக அரசை மக்கள் விரைவில் அப்புறப்படுத்துவார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.