உலகின் மிக நீண்ட கால மரண தண்டனைக் கைதியான தனது சகோதரனை விடுவிக்கப் போராடுவதில், 91 வயதான ஹிடெகோ ஹகமாடா தனது வாழ்நாளில் பாதி நாட்களைக் கழித்தார். அவர் 56 ஆண்டுக்காலம் போராடி, தனது தம்பி நிரபராதி என்பதை நிரூபித்தது எப்படி? அதற்காக அவர் கொடுத்த விலை என்ன?