சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான ஐல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது சிறப்பாக நடைபெறும். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றும். அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் பிள்ளமநாயக்கன்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, கொசுவபட்டி, தவசிமடை, உலகம்பட்டி, மறவபட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடைபெறும்.
இந்நிலையில் வரும் பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில்,
*ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளை துன்புறுத்தக் கூடாது!
*மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது!
*ஜல்லிக்கட்டு போட்டிகளை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்!
*ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்!
*ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட www.jallikattu.tn.gov.in தளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும்.
என அனைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசின் முதன்மைச் செயலாளர் சத்ய பிரதா சாகு கடிதம் அனுப்பியுள்ளார்.
The post ஜல்லிக்கட்டு போட்டி.. முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!! appeared first on Dinakaran.