ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மேலும் குறையும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது: ஜிஎஸ்டி வரி அடுக்கு மற்றும் விகிதங்களை அறிவார்ந்த முறையில் சீரமைக்கும் பணிகள் ஏறத்தாழ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஜிஎஸ்டி விகிதங்களில் ஏற்கெனவே பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள. அதன் காரணமாக 2017 ஜூலை 1-ல் ஜிஎஸ்டி அறிமுகம் செய்த போது வருவாய் நடுநிலை விகிதம் (ஆர்என்ஆர்) 1.5.8 சதவீதமாக இருந்த நிலையில் அது 2023-ல் 11.4 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த விகிதம் தற்போதைய சீரமைத்தலுக்குப் பிறகு மேலும் குறையும்.