‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்திருக்கிறார் சிவராஜ்குமார்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தமிழக – கேரளா எல்லையில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மிர்ணா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.