ஹைதராபாத்: இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வரும் 22-ம் தேதி திருமணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை சிந்து திருமணம் செய்து கொள்ள உள்ளார். அவர் போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். திருமணம் உதய்பூரில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சிந்துவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.