5 மில்லியன் டாலர்கள் செலவழித்து பெறக்கூடிய “கோல்டன் கார்டு” விசா திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.தற்போது நடைமுறையில் இருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விசா வழங்கும் ஈபி-5 முதலீட்டாளர் விசா திட்டத்திற்கு பதிலாக, புதிய “கோல்டு கார்டு” விசா திட்டம் இருக்கும் என்றார் அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவார்ட் லட்னிக்.