ஜோகன்னஸ்பர்க்: டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களைக் கைப்பற்றியவர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் படைத்துள்ளார். அவர் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ 20 தொடரில் விளையாடி வருகிறார். எம்ஐ கேப் டவுன் அணிக்காக களமிறங்கி அசத்தி வருகிறார் ரஷித்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பார்ல் ராயல்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ரஷித் கான் எம்ஐ கேப் டவுன் அணிக்காக விக்கெட்களை கைப்பற்றினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 633 விக்கெட்களை அவர் கைப்பற்றியுள்ளார்.