பத்திரப்பதிவு அலுவலகங்களில் சாட்சி கையெழுத்துப் போடுபவரின் கதையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம், ‘சாட்சி பெருமாள்’. இதில் முதன்மை பாத்திரத்தில் அசோக் ரங்கராஜன் நடித்துள்ளார். மற்றும் ராஜசேகர், பாண்டியம்மாள், எம்.ஆர்.கே. வீரா நடித்துள்ளனர். உண்மைச் சம்பவப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு மதன் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். மஸ்தான் இசை அமைத்துள்ளார். வி.பி.வினு இயக்கியுள்ளார்.
பல்வேறு திரைப்பட விழாக்களில் 10 விருதுகளைப் பெற்றுள்ள இந்த படம் இப்போது ‘டென்ட் கொட்டா’ ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. படத்தைப் பார்த்த இயக்குநரும் நடிகருமான சிங்கம்புலி உட்பட பலர் பாராட்டி வருகின்றனர்.