அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டிரம்ப்-வான்ஸ் தொடக்க விழா குழுவின் அழைப்பை ஏற்று இந்த விஜயம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் புதிதாக பொறுப்பேற்கும் நிர்வாகத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவார். மேலும், இந்த விழாவுக்கு வருகை தரும் இதர வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் ஜெய்சங்கர் உரையாடுவார்" என்று தெரிவித்துள்ளது.