சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.71,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ரூ.8,975-க்கும், பவுனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.71,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை மீண்டும் ரூ.72 ஆயிரத்தை நெருங்குவது, பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.