சென்னை: சென்னையில் இன்று (மே.12) தங்கம் விலை குறிப்பிடத்தக்க அளவு சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.165 குறைந்துள்ளது.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 14-ம் தேதி ஒரு பவுன் ரூ.69,760-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்தது. இந்தியா – பாகிஸ்தான் மோதல் மூண்டதை ஒட்டி, மே.7 ஒரே நாளில் 2 முறை அதிகரித்து ‘ஷாக்’ கொடுத்தது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.9,100-க்கு விற்பனை செய்யப்பட்டது.