சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.26) பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.
தங்கத்தை மிகவும் பாதுகாப்பான முதலீடாக மக்கள் பார்க்கின்றனர். அதன் காரணமாக தங்கத்தை ஆபரணமாகவும் மற்றும் காசுகளாகவும் மக்கள் வாங்குவது வழக்கம். உலக அளவில் தங்கத்தை அதிகம் வாங்கும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் உள்ளது.