சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கியக் காரணிகளாக உள்ளன. அதனடிப்படையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக இருந்துவந்தது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.73,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 உயர்ந்து, ரூ.9,170-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் சுத்தத் தங்கம் ரூ.80,032-க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.126 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 26 ஆயிரமாகவும் இருந்தது.