
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.6) இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,125 ஆகவும், ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.89,000 ஆகவும் விற்பனையாகிறது. இது புதிய வரலாற்று உச்சம் என்பது கவனிக்கத்தக்கது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை அமைகிறது.

