நித்யானந்தா என்றைக்கு அடியெடுத்து வைத்தாரோ அன்று முதலே மதுரை தெற்காவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீன மடத்துக்குள் சர்ச்சைகள் சம்மணம் போட்டு உட்கார ஆரம்பித்துவிட்டன. அந்த விதத்தில் இப்போது, மடத்தில் தம்பிரான் பட்டமேற்ற விஸ்வலிங்க தம்பிரான் மாவட்ட ஆட்சியரிடம் மதுரை ஆதீனத்துக்கு எதிராக பிராது கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி வருகிறது.
மதுரை ஆதீன மடத்திற்கு இளைய ஆதீனமாக இன்னொருவருக்கு பட்டம் சூட்டுவதை தடுக்க வேண்டும் எனவும், தகுதியான தன்னையே இளைய ஆதீனமாக நியமிக்க வேண்டும் எனவும் தனது புகாரில் தெரிவித்துள்ள விஸ்வலிங்க தம்பிரான், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, முக்தி அடைந்த ஆதீனம் அருணகிரிநாதரின் சமாதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு கவனம் ஈர்த்தார்.