தமிழகத்தின் நிதிநிலை திவாலாகப் போகிறது என்று அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் வைத்திருப்பது வருந்தத்தக்கது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
விருதுநகர் அருகே மல்லாங்கிணரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழகத்தின் நிதிநிலை குறித்து தவறான தகவல்களைக் கூறியுள்ளார். பரபரப்புக்காக அடிப்படையற்ற குற்றச்சாட்டை வைத்திருப்பது வருந்தத்தக்கது.