சென்னை: மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக, செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில், இந்திய ரயில்வேயில் பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக, ரூ.1 லட்சத்து 16 கோடியே 514 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிக்னல், தொலைதொடர்பு துறை, தண்டவாளம் மேம்பாடு உட்பட பல பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.