திருவள்ளூர்: தமிழகத்தில் நிகழும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திருவள்ளூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில், பேருந்து நிலையங்களில் இரயில் நிலையங்களில், மருத்துவமனைகளில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தத் தவறியதாக திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.