புதுடெல்லி: தமிழக முதல்வர் கேட்ட ரூ. 2 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக கட்சிகள் வலியுறுத்தின.
நாடாளுமன்ற மக்களவையில் இது தொடர்பாக உரையாற்றிய திமுக எம்பி டி.ஆர் பாலு, “ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்பட தமிழகத்தின் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் புயல் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏழை எளிய மக்கள் மிகப் பெரிய துயரை சந்தித்துள்ளனர்.