தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது ஏன் என்பது குறித்து, இந்திய மொழிகளுக்கான மொழி சமத்துவ உரிமை இயக்கத்தின் அனைத்திந்திய ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நம் நாட்டில் நிர்வாக மொழிகளாக இந்தியும், ஆங்கிலமும் உள்ளன. ஆனால், அதை கல்வித் துறையில் கண்மூடித்தனமாக நீட்டித்துக்கொள்ள முடியாது என்பதுதான் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதமாகும். இந்தியா பன்மொழித்துவத்தை நோக்கி நகர்வதற்கு பதிலாக, இன்றைய ஆட்சியாளர்களால் ஒற்றை மொழிச் சூழலை நோக்கிச் செல்கிறது.