விழுப்புரம் : விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள திருவள்ளூர் சிலைக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குழந்தைகளுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி, “தமிழ்நாடு, தமிழ் மொழி என்றாலே வெறுப்புடைய ஒருவரை ஆளுநராக நியமித்துள்ளனர். ஆளுநர் இது போன்ற மொழி உணர்வுள்ள தமிழகத்தில், தமிழக அரசியலில் தலையிடுவது மிக மோசமான ஒன்று. தமிழ் தாய் வாழ்த்து பாடுவது கூட ஆளுநருக்கு பிடிக்கவில்லை,” இவ்வாறு தெரிவித்தார்.
The post தமிழ்நாடு அரசியலில் ஆளுநர் தலையிடுவது மிகவும் மோசமானது : அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.