நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுவோருக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகைக்கான நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்து, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக செயல்படுத்துவது மட்டுமல்லாமல், கிராமியப் பகுதிகளில் நீடித்த மற்றும் நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குகிறது. இத் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் தேசிய அளவில் செயல்படுத்துவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.