சென்னை: திருச்சியில் 2012ல் தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலை தொடங்கப்பட்டது. 2013-14 கல்வியாண்டில் இந்த பல்கலைக்கழகம் பாடத்திட்டத்தை தொடங்கியது. இரண்டு இளங்கலை பட்டப்படிப்புகளை வழங்குகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை பொதுச் சட்ட சேர்க்கை தேர்வில் (கிளாட் தேர்வு) பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நடக்கிறது.
பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில் உறுப்பினராக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினரான ஜி.மோகனகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழ்நாடு ேதசிய சட்ட பல்கலை வேந்தரான உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் வௌியிட்டுள்ளார். 2025 பிப்ரவரி 1ம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் உறுப்பினர் செயல்படுவார் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலை கல்வி கவுன்சில் உறுப்பினராக ஜி.மோகனகிருஷ்ணன் நியமனம் appeared first on Dinakaran.