சென்னை: இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு அரணாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எத்தகைய திட்டங்களை தீட்டி வருகிறாரோ அதை அப்படியே செயல்படுத்தி இருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஹஜ் பவன் கட்டப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
தமிழ்நாடு முதல்வர் சிறுபான்மையினர் நலன் காப்பதில் முதல்வர்களின் முதல்வராக இருக்கிறார். சிறுபான்மையின மக்களில் ஒருவராக நின்று திட்டங்கள் தீட்டும் முதல்வர் ஸ்டாலின் வழியை காங்கிரஸ் கூட்டணியில் திமுகவோடு அங்கம் வகிக்கிறோம் என்ற தோழமை உணர்வோடு பயணிக்கும் கர்நாடக முதல் அமைச்சரும் பின்பற்றுவது மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் ஏற்படுத்துகிறது. இரண்டு முதலமைச்சர்களும் ஒரே வழியில் பயணிப்பது நாகரிகமான தொடக்கமாக மாறியிருப்பது நல்லதோர் தொடக்கம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை பின்பற்றி பெங்களூருவில் ஹஜ் பவன் அமைக்க கர்நாடகா முடிவு: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் வரவேற்பு appeared first on Dinakaran.