சென்னை: கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 30 மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 15 செ.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு 14 செ.மீ., காக்காச்சி, தரங்கம்பாடியில் தலா 12 செ.மீ. மழை பெய்துள்ளது. செம்பனார்கோவில், மாஞ்சோலை, மயிலாடுதுறையில் தலா 11 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. திருப்பூண்டி, தலைஞாயிறு, பொன்னேரியில் தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.