சென்னை: தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஏஆர்ஆர் இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.
இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘தமிழ்’ உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழியாகும். குறிப்பாக தமிழ் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் அதனைச் செறிவாக்குவதிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளன.