சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு சென்ற இளைஞர் மாயமானது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த புஷ்பநாதன். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு சென்ற தனது மகன் மேகநாதன் வீடு திரும்பவில்லை என மனுவில் கூறியுள்ளார். காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், விசாரணையின் நிலை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார். தொடர்ந்து வாதிட்ட அவர், மேகநாதனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினார். மேலும், தாம்பரம், புதுச்சேரி சென்னை உள்ளிட்ட இடங்களில் மேகநாதனை தேடிய நிலையில் அவர் கிடைக்கவில்லை என தெரிவித்தார். இருப்பினும், அவரை தேடும் ப ணி தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக கூறினார். இதனையடுத்து வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
The post தவெக மாநாட்டில் மாயமான இளைஞர்: விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தரப்பில் தகவல் appeared first on Dinakaran.