மும்பை: முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் அதன் தினசரி 1ஜிபி மொபைல் டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்தியுள்ளது. இதனால் இப்போது மொபைல் டேட்டா தேவைப்படும் ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.299 என்ற பிளானின் கீழ் ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இந்திய டெலிகாம் நிறுவனங்களில் முதன்மையானதாக திகழும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது ரிலையன்ஸ் ஜியோ. கடந்த 2016-ல் தான் இந்த நிறுவனம் பொது பயன்பாட்டுக்கு சேவையை வழங்கி வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் டெலிகாம் சந்தையில் கிடுகிடுவென வளர்ச்சி கண்டது. அதற்கு காரணம், அந்த நிறுவனத்தின் ஆரம்ப கால ரீசார்ஜ் திட்டங்கள்.