தினமும் ஓர் ஆப்பிள் தின்றால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய தில்லை. இது ஆப்பிளின் நன்மையை விளக்க சொல்லப் படும் ஆங்கிலப் பழமொழி. ஆனால், இது அந்த அளவுக்கு உண்மையில்லை என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக் கின்றனர.
தினமும் ஆப்பிள் தின்பவர் களும், எப்போதாவது மட்டுமே ஆப்பிள் தின்பவர்களும் ஒரே அளவுக்குத்தான் மருத்துவரைச் சந்திக்கிறார்கள் என புதிய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
மிக்சிகன் பல்கலைக்கழக நர்சிங் பிரிவு ஆய்வாளர் அன் ஆர்பர் மற்றும் அவரது சகாக்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இவர்கள், கடந்த 2007-08 மற்றும் 2009-10ம் ஆண்டுகளில் தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து ஆய்வு தொடர்பான தரவுகளை ஆய்வு செய்தனர். இதில், 8,399 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 753 பேர் மட்டுமே ஆப்பிள் சாப்பிடுபவர்கள், 7,646 பேர் ஆப்பிள் சாப்பிடாதவர்கள்.
இதுதொடர்பான தரவுகளை ஆய்வு செய்ததில், தினமும் ஆப்பிள் சாப்பிடுபவர்களும், எப்போதாவது மட்டுமே ஆப்பிள் சாப்பிடுபவர்களுக்கும் இடையே மன நலம் மற்றும் உடல் நலக் காரணங்களுக்காக மருத்துவரைச் சந்திக்கும் எண்ணிக்கையில் வேறுபாடு இல்லை எனத் தெரியவந்துள்ளது.
இருப்பினும், ஆப்பிள் சாப்பிடுபவர்கள் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் குறைந்த அளவு மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். இதனால், மருந்துகளுக்குச் செலவிடும் தொகை சற்றுக் குறையும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் ஓர் ஆப்பிள் தின்றால் அடிக்கடி மருந்துக் கடைக்குச் செல்ல வேண்டியதில்லை என்று வேண்டுமானால் பழமொழியை மாற்றிக் கொள்ளலாம் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.