சென்னை: என்னை வச்சு ஒரு கட்சி என்ன பண்ணும்? வேணும்னா என் பையனை எடுத்துக்கட்டும். திமுக இதை செஞ்சா, நானே அவங்களுக்கு பிரசாரம் செய்வேன் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். சென்னை மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நடிகர் எஸ்.வி.சேகர் அளித்த பேட்டி: எனக்கு 75 வயது ஆகிவிட்டது. என்ன வச்சு ஒரு கட்சி என்ன பண்ணும். என் பையனுக்கு 40 வயது தான் ஆச்சு. அவனை எடுத்து கொள்ளட்டும்.
இதுவரைக்கும் தமிழகத்தில் ஓட்டே போடாத ஒரு 10 லட்சம் பேர் இருக்கிறார்கள். அதில் 3 லட்சம் பேரை ஓட்டு போடுவதற்கு உண்டான வழிமுறைகளை எல்லாம் நான் அவரிடம் சொல்லியிருக்கிறேன். அது நடந்தது என்றால், நான் கண்டிப்பாக திமுகவுக்கு பிரசாரம் செய்வேன். தமிழ்நாட்டில் பட்டன் போன் கூட இல்லாமல் பிராமணர்கள் 10 லட்சம் பேருக்கு மேல் இருக்கிறார்கள். பிணம் சுமப்பவர்கள், டேபிள் கிளின் பண்றவங்க. சமையல் வேலை செய்றவங்க, புரோகித வேலை செய்றவங்க, அப்படிப்பட்டவர்களுக்கு அந்தணர் நலவாரியம் என்று ஒரு வாரியம் அமைத்து கொடுக்க வேண்டும்.
அப்புறம் எல்லா சமூகத்தினருக்கும் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், பிராமணர்களுக்கு இல்லை. வேண்டாம். 3 எம்எல்ஏ கொடுக்கட்டும். அந்த 3 எம்எல்ஏக்களுக்கும் நம்ம சொல்றவங்களுக்கு கொடுக்க வேண்டியது அல்ல. திமுகவிலேயே எத்தனை பேர் இருக்கிறார்கள். நான் இனி தேர்தலில் நிற்க மாட்டேன் என்று 10 வருடத்திற்கு முன்னாடியே முடிவு எடுத்து விட்டேன். நான் ஒரு முறை மயிலாப்பூர் எம்எல்ஏவாக இருந்தேன்.
300 கோடி ரூபாய் வேலை நடந்தது. அதில் ஒரு பைசா கூட கமிஷன் வாங்காத நேர்மையான எம்எல்ஏவாக இருந்து விட்டேன். அது எனக்கு போதும். நாளைக்கு என் பையன் விருப்பப்பட்டால் திமுகவில் சேரலாம். அதில் எனக்கு என்ன ஆட்சேபனை இருக்கிறது. கண்டிப்பாக நான் வரவேற்பேன். தற்போதைய அரசியல் சூழ்நிலை, இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையே நீடித்தால் திமுக தான் ஆட்சிக்கு வரும். இவ்வாறு நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.
The post திமுக இதையெல்லாம் செஞ்சா, நானே அவங்களுக்கு பிரசாரம் செய்வேன்: நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி appeared first on Dinakaran.