திருமலை சாலைகளில் குப்பைகள் போடுவதை பக்தர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி கேட்டுக்கொண்டார்.
'தூய்மை ஆந்திரா – தூய்மை திருமலை’ எனும் திட்டத்தின் கீழ் நேற்று திருமலை முழுவதும் 8 குழுக்களாக பிரிந்து தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் திருமலையில் முதல் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி தலைமையில் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் தூய்மைப் பணியில் பங்கேற்றனர்.