அதிபர் பதவிக்கு திரும்பிய சில மணி நேரங்களிலேயே, சட்டவிரோத குடியேற்றத்தையும் அமெரிக்க எல்லையில் தஞ்சமடைவோர் எண்ணிக்கையையும் குறைப்பேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அதிபர் மாளிகையிலிருந்து புயலென பல உத்தரவுகளில் டிரம்ப் திங்கள்கிழமை மாலை கையெழுத்திட்டார்.