திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபம் மலையில் ஏற்பட்ட மண் சரிவு குறித்து ஆய்வு செய்ய புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுனர்கள் குழு மலை மீது பயணம் செய்து மலையின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள புறப்பட்டனர்.
திருவண்ணாமலையில் கார்திகை தீபத்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 2,668 அடி மலை மீது மகா தீபம் ஏற்றும் நிகழ்வு வரும் 13-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 2,500 பக்தர்களுக்கு அனுமதி வழங்கி அவர்கள் மலை உச்சிக்கு செல்ல அனுமதி வழங்குவது வழக்கம். ஆனால் மகா தீப மழையில் சில இடங்களுல் ஏற்பட்டுள்ள மண் சரிவால் மலை ஏற அனுமதிப்பது தொடர்பாக புவியியல் வல்லுநர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஆய்வு முழுமையாக முடிந்த பின் பக்தர்கள் மலை ஏற அனுமதிப்பது சாத்தியமா என்பது குறித்து வல்லுநர் குழுவினர் தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள். அண்மையில் பெய்த மழை காரணமாக மகாதீப மலையின் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
The post திருவண்ணாமலையில் பக்தர்கள் மலை ஏறுவது சாத்தியமா? புவியியல் வல்லுநர்கள் ஆய்வு appeared first on Dinakaran.