திருவள்ளூர்; திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மொத்தம் ரூ.1166.32 கோடி மதிப்பிலான 6760 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 7369 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,02,531 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இன்று (18.4.2025) திருவள்ளூர் மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் பொன்னேரியில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து, முதலமைச்சர் அவர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.4.2025) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஆண்டார்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 418 கோடியே 15 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவிலான 6760 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 390 கோடியே 74 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 7369 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 357 கோடியே 43 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,02,531 பயனாளிகளுக்கு வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்
* ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் 3 உயர்மட்ட பாலங்கள், 16 பள்ளிக் கட்டடங்கள், 3 ஊராட்சி மன்ற அலுவலகங்கள், 9 அங்கன்வாடி மையங்கள், 3 உணவு தானிய சேமிப்பு கிடங்குகள், 1 கிராமச் செயலகம், 1 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கக் கட்டடம், 3 பல்நோக்கு கட்டடங்கள், 2 கலையரங்கங்கள், 1 சமுதாயக்கூடம், 1 நியாயவிலைக் கடை, 11 மேல்நிலை நீதேக்க தொட்டிகள், 1000 கலைஞர் கனவு இல்லங்கள், மிக்ஜாம் புயலால் சேதமடைந்த 438 வீடுகள் கட்டுமானம், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தில் பழுதுபார்க்கப்பட்ட 3895 வீடுகள், 23 பழங்குடியினர் நல வீடுகள், 4 சமையலறைக் கட்டடங்கள், 2 பள்ளி கழிவறைகள், ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டத்தில் 224 வீடுகள், 30 தார் சாலை பணிகள், 17 சிமெண்ட் கான்கீரீட் சாலைகள், 14 சுற்றுச்சுவர்கள், 280 பேவர் பிளாக் சாலைகள், 8 குறுபாலங்கள், 226 வடிகால் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள், 6 தடுப்பு சுவர்கள், பல்நோக்கு கட்டடம், 4 பள்ளிகளில் புதிய கழிவறைகள், 245 குடிநீர் பணிகள், 3 ஓரடுக்கு கப்பி சாலைகள், என 194 கோடியே 59 இலட்சத்து 82 ஆயிரம் ரூபாய் செலவில் 6507 முடிவுற்ற பணிகள்
* ஊராட்சித் துறையின் 15-வது மத்திய நிதிக்குழு மானியத்தில் 8 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், 2 நியாய விலைக் கடைகள், 1 அங்கன்வாடி கட்டடம், 1 ஆரம்ப சுகாதார நிலையம், 2 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், என 2 கோடியே 89 இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் செலவில் 14 முடிவுற்ற பணிகள்;
* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஆவடி மாநகராட்சியில் விளிஞ்சியம்பாக்கம், பருத்திப்பட்டு ஆகிய இடங்களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், சாலையினை தூய்மை செய்யும் வாகனம், கழிவுநீர் அடைப்புகளை நீக்கும் வாகனம், சோழம்பேடு பாரதியார் தெரு, பெரியார் நகர் ஆகிய இடங்களில் கூடுதல் நகர்ப்புற பொது சுகாதார மையங்கள், ஸ்ரீனிவாசா நகரில் மேம்படுத்தப்பட்ட பூங்கா, திருமுல்லைவாயல் காலனியில் ஆதிதிராவிடர் பள்ளியில் கூடுதல் பள்ளிக்கட்டடம், தண்டுரை காந்தி நகர், சின்னம்மன் கோயில் தெரு, பருத்திப்பட்டு இந்திரா நகர், கோவில்பதாகை அசோக்நகர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற சுகாதார துணை மையங்கள், கோயில்பதாகை பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கூடுதல் பள்ளிக்கட்டடம், எட்டியம்மன் நகர் உயர்நிலைப்பள்ளியில் ஆய்வகக் கட்டடம் மற்றும் கூடுதல் பள்ளிக் கட்டடம், கோணாம்பேடு மாநகராட்சி பள்ளியில் கூடுதல் பள்ளிக் கட்டடம், என 8 கோடியே 36 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலான 17 முடிவுற்ற பணிகள்
* திருவள்ளூர் நகராட்சியில் 2 நியாய விலைக்கடைகள், நகராட்சி மேல்நிலைப் பள்ளிக் கட்டடம், 46 சாலைப் பணிகள், என 5 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவில் 4 முடிவுற்ற பணிகள்
* பேரூராட்சிகள் சார்பில் ஆரணி பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மேம்படுத்தப்பட்ட பள்ளிக் கட்டடங்கள், ஜி.என். செட்டி தெருவில் சுற்றுச்சுவர், ஆதிதிராவிடர் பள்ளியில் மேம்படுத்தப்பட்ட பள்ளிக் கட்டடம், பெஸ்தா தெருவில் மழைநீர் வடிகால் பணிகள், வளமீட்பு பூங்காவில் அமைக்கப்பட்ட நடைபாதை, உயிரி அகழ்வு முறையில் குப்பைகள் அகற்றும் வசதி; கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட முக்கோட்டீஸ்வரர் கோயில் குளம், கோரிமேடு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பைப்லைன் அமைக்கப்பட்ட பணி, மேம்படுத்தப்பட்ட பிரபு நகர் மற்றும குரு கிருபா நகர் பூங்காக்கள், மீஞ்சூர் பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட அம்மா செட்டி குளம், மன்னார் சுவாமி நகர் மெயின் ரோடு, ராஜம்மாள் நகர் மெயின் ரோடு, ஹர்ஷினி நகர், கணேஷ் நகர் போன்ற பல்வேறு பகுதிகளில் பேவர் பிளாக் சாலைகள்
* நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் வ.உ.சி. தெரு, தந்தை பெரியார் தெரு, போன்ற பல்வேறு பகுதிகளில் பேவர் பிளாக் சாலைகள், வேணுகோபால் சாமி தெரு மற்றும் ஜீவானந்தம் தெருவில் சிமெண்ட் சாலைகள், பாடியநல்லூர் திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் சுற்றுச்சுவர், தந்தை பெரியார் தெரு, அறிஞர் அண்ணா தெரு, வள்ளலார் தெரு போன்ற பகுதிகளில் சாலைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் வளமீட்பு பூங்காவில் அமைக்கப்பட்ட மேற்கூரை, அண்ணா தெருவில் துணை சுகாதார நிலையக் கட்டடம்; திருமழிசை பேருராட்சியில் சாய் அவென்யூவில் பூங்கா, ஸ்ரீவாரி நகர் பிரதான சாலை மேம்பாட்டுப் பணிகள், பிராயம்பத்து பகுதியில் சுற்றுச்சுவருடன் கூடிய படிப்பகம், ஏ.ஆர்.கே. விக்னேஷ்வரா நகர், பெருமாள் கோயில் முன்புறம், ஜாகுவர் சிட்டி, குபேரன் கார்டன், உடையவர் கோயில் பகுதி, உள்ளிட்ட பகுதிகளில் பேவர் பிளாக் சாலை, மேம்படுத்தப்பட்ட எல்.டி.எம். நகர் பூங்கா மற்றும் மாசிலாமணி நகர் பூங்கா, பாதாள சாக்கடை திட்ட வளாகத்தில் கழிவுநீர் சேகரிப்பு தொட்டிக்கு இரும்பு வலை, கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குழாய் கிணறு மற்றும் மோட்டார், குண்டுமேடு பிரதான சாலை மற்றும் குறுக்குத் தெருவில் தார் சாலை பணிகள், குண்டுமேடு பகுதியில் அங்கன்வாடி கட்டடம், மண்புழு உரக்கூடம், தெற்கு மாட வீதி மற்றும் குண்டுமேடு பகுதியில் பழுதுபார்க்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், வளமீட்பு பூங்காவில் நடைபாதை வசதி, சுற்றுச்சுவர், தரம்பிரிக்கும் பொருட்கள் வைக்கும் கூடம், நவீன தகன எரிவாயு மேடை, சீனியம்மாள் தெருவில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி சுற்றுச்சுவர், பார்சூன் நகர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு ஆழ்துளைக்குழாய் கிணறு மற்றும் பேவர் பிளாக், திருவள்ளூர் நெடுங்சாலையில் நவீன எரிவாயு தகனமேடை, உடையவர் கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்பறைக் கட்டடங்கள்
* பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் பொன்னியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பேவர் பிளாக் சாலை, இ.எஸ்.டி. நகர் முதல் தெருவில் ஆழ்துளை கிணறு, அண்ணாமலை நகரில் மேம்படுத்தப்பட்ட பூங்கா, இ.எம்.எஸ். நகர், அம்பேத்கர் காலனி உள்ளிட்ட பகுதியில் சிமெண்ட் சாலைகள், பொன்னியம்மன் கோயில் தெரு கிழக்கு பகுதியில் மழைநீர் வடிகால்வாய் என 21 கோடியே 46 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் 58 முடிவுற்ற பணிகள்
* வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பூண்டி ஒன்றியம் – குன்னவலம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் – ஆத்துப்பாக்கம், திருவாலங்காடு ஒன்றியம் – பழையனூர், திருவள்ளூர் ஒன்றியம் – பேரத்தூர், கடம்பத்தூர் ஒன்றியம் – பேரம்பாக்கம், புதுமாவிலங்கை, ஈக்காடு ஒன்றியம் – அரண்வாயல்குப்பம் பி, எல்லாபுரம் ஒன்றியம் – ஏனம்பாக்கம், மீஞ்சூர் ஒன்றியம் – பிரளயம்பாக்கம், சோழவரம் ஒன்றியம் – வமுதிகைமேடு, பூண்டி ஒன்றியம் – கைவண்டூர் ஆகிய இடங்களில் 4 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் 12 உலர்களத்துடன் கூடிய தரம் பிரிப்புக்கூடங்கள்
* திருவள்ளூர் ஒன்றியம் – ஈக்காடு மற்றும் ஊத்துக்கோட்டை ஒன்றியம் – ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களில் 9 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் 2 சேமிப்புக் கிடங்குகள், பூவிருந்தவல்லி ஒன்றியம் – குத்தம்பாக்கத்தில் 1 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் குளிர்பதனக் கிடங்கு
* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் திருவள்ளூர் வட்டாரம் – புட்லூரில் துணை சுகாதார நிலையம், திருவள்ளூர் வட்டாரம் – வெள்ளியூர் மற்றும் சோழவரம் வட்டாரம் – புதூர் ஆகிய இடங்களில் வட்டார பொது சுகாதார அலகுகள், சோழவரம் வட்டாரம் – பூதூர், எல்லாவரம் வட்டாரம் – வெங்கல், வில்லிவாக்கம் வட்டாரம் – திருவேற்காடு ஆகிய இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பூண்டி வட்டாரம் – அல்லிகுழியில் துணை சுகாதார நிலையம் மற்றும் புழல் வட்டாரம் – நாரவாரிக்குப்பத்தில் நகர்ப்புற துணை சுகாதார நிலையம், என 5 கோடியே 55 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சுகாதார நிலையங்கள்
* நீர்வளத்துறை சார்பில் ஆரணியாற்றில் சின்ன காவானம், சோமஞ்சேரி, எரடி பாளையம் தத்தமஞ்சி கிராமத்தில் 22 கோடியே 55 இலட்சம் ரூபாய் செலவில் வெள்ளத் தடுப்பு பணிகள், கொசஸ்தலையாற்றில் பூண்டி கிராமத்தில் உள்ள சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் நீரியியல் மற்றும் நீர்நிலையியல் ஆய்வுக் கழகத்தின் அருகில் சேதமடைந்த மதகுகளின் கிணறுகள் சீரமைக்கும் பணிகள், பரபயங்கராபுரம் கிராமம் அருகே சோளிங்கர் கிளைக் கால்வாயின் குறுக்கே புதிய நீர் ஒழுங்கி பணிகள், சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கத்தின் வழிந்தோடி கதவுகளை சீரமைக்கும் பணிகள், சேக்காடு ஏரியின் ரெகுலேட்டர் ஏற்பாடுகள் மற்றும் உபரிநீர் கால்வாய் மேம்படுத்தும் பணிகள், நாரவரிகுப்பம் கிராமத்தில் உபரிநீர் கால்வாயில் செங்குன்றம் ஏரி உள்வாய் வரை வெள்ள தடுப்பு சுவர் மற்றும் நுழைவாயில் அமைக்கப்பட்ட பணிகள், கொசஸ்தலையாற்றின் வலது கரையில் விச்சூர் கிராமத்தில் இருதுளை உள்வாங்கி பணிகள், கொசஸ்தலையாற்றின் இடது கரையில் குதிரைபள்ளம் கிராமத்தில் ஒருதுளை உள்வாங்கி பணிகள், குசா ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தின் கீழ்புறம் வெள்ளத்தடுப்பு சுவர் மற்றும் வெள்ளைக்காரை அமைக்கு பணிகள், என 45 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவில் வெள்ளத் தடுப்பு பணிகள்
* கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பெரியபாளையம் மற்றும் வெள்ளியூர் கிராமங்களில் 1 கோடியே 17 இலட்சம் ரூபாய் செலவில் 2 கால்நடை மருந்தகங்கள்
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தொல்குடி திட்டத்தின் கீழ், திருக்கண்டலம் ஊராட்சி, இருளர் காலனியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, தண்ணீர் உறிஞ்சு குழி, பாலவாக்கம் ஊராட்சி – ஜெ.ஜெ. நகர் மயானத்திற்கு தண்ணீர் வசதி, நந்தியம்பாக்கம் ஊராட்சி – இருளர் காலனியில் 10 சோலார் விளக்குகள், கடப்பாக்கம் ஊராட்சி – செஞ்சியம்மன் நகர் இருளர் காலனியில் சிமெண்ட் சாலைகள், எலப்பநாயுடு ஊராட்சி – காந்தி கிராமத்தில் பொது குழாய்கள் வசதி, கிளாம்பாக்கம் ஊராட்சி – விஷ்ணு நகர் காலனியில் தார்சாலை பணிகள், ஆத்தூர் ஊராட்சி பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் ஆழ்துளை கிணறு மற்றும் தண்ணீர் தொட்டி, வியாசபுரம் ஊராட்சி பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் பைப்லைன் வசதி, மேல்முருக்கம்பட்டு ஊராட்சி பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் தெரு மின்விளக்கு, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, அங்கன்வாடி மையம், கொல்லாலகுப்பம் ஊராட்சி பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, பாண்றவேடு ஊராட்சி இருளர் காலனியில் மயானத்திற்கு தண்ணீர் வசதி, என 1 கோடியே 98 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் செலவில் 14 முடிவுற்ற பணிகள்
* பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய வட்டங்களில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் பேவர் பிளாக் சாலைகள், சிமெண்ட் சாலைகள், எரிமேடை வசதி, சாலைவசதி மற்றும் சுற்றுச்சுவர், கழிவுநீர் கால்வாய் வசதிகள், மயானத்திற்கு சுற்றுச்சுவர், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மற்றும் குழாய் வசதி, நீரோடை கல்வெர்ட் என 1 கோடியே 61 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் 16 முடிவுற்ற பணிகள்
* அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆரணி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், நாரவாரிகுப்பம், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, திருமழிசை, ஊத்துக்கோட்டை ஆகிய பேரூராட்சிகளில் 7 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் பேவர் பிளாக் சாலைகள், சமுதாயக் கூடங்கள், சிமெண்ட் சாலைப் பணிகள், மழைநீர் வடிகால்வாய்கள், குடிநீர் வசதி
* தாட்கோ சார்பில் வடகரை, சோழவரம், மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஈக்குவாராபாளையம், பள்ளிப்பட்டு, அம்மையார்குப்பம், கடம்பத்தூர், மேல்நல்லாத்தூர், ஊத்துக்கோட்டை, திருத்தணி, பெரியகலகத்தூர் செவ்வாய்பேட்டை, திருவாலங்காடு, மாத்தூர், பொதட்டூர்பேட்டை, வெடியங்காடு ஆகிய இடங்களில் உள்ள ஆதிதிராவிட நலப் பள்ளிகளுக்கு 4 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் 23 ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிக் கட்டடங்களின் மேம்பாட்டுப் பணிகள்
* தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் அம்மம்பாக்கம் மற்றும் கூனிப்பாளையம் ஊராட்சிகளை சார்ந்த 11 குடியிருப்புகளுக்கு 3 கோடியே 9 இலட்சம் ரூபாய் செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம்; நெடுஞ்சாலைத் துறை சார்பில் பசியாவரத்தில் 18 கோடியே 93 இலட்சத்து 17 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்மட்டப் பாலம்; அம்மணம்பாக்கம் கிராமத்தில் சென்னை எல்லை சாலை திட்டத்தினால் பாதிக்கப்பட்ட 24 நரிக்குறவர்களுக்கு 1 கோடியே 16 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வீடுகள்; வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வேளகாபுரம் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு, வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் ஆவடி வட்டத்தில் சார் பதிவாளர் அலுவலகம், பள்ளிக்கல்வித் துறை சார்பில் காமராஜ் நகருக்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறைகள், மத்தூர் மற்றும் வெங்கம் கிராமங்களில் வகுப்பறைக் கட்டடங்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் திருத்தணி வட்டத்தில் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் மற்றும் கூடுதல் கட்டடம், என 55 கோடியே 79 இலட்சத்த 86 ஆயிரம் ரூபாய் செலவில் முடிவுற்ற 7 பணிகள்;
* கூட்டுறவுத் துறை சார்பில் திருவள்ளூர் வட்டம், திரூர் கூட்டுறவு அருங்காட்சியகம், திருவள்ளூர் மற்றும் பொன்னேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு புதிய கிடங்குகள், திருத்தணி வட்டம், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சிறுதானிய அரவை இயந்திரம், பொன்னேரி வட்டம், பச்சைப்பயிறு அறுவடை இயந்திரம், திருத்தணி வட்டத்தில் ஆவின் சில்லறை விற்பனை நிலையம், என 1 கோடியே 7 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் 5 முடிவுற்ற பணிகள்; என மொத்தம் 418 கோடியே 15 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் 6760 முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 4197 வீடுகள், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 582 வீடுகள், ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டத்தின் கீழ் 377 வீடுகள், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் 611 வீடுகள், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தின் கீழ் 425 வீடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சார்பில், 34 அங்கன்வாடி மையங்கள், 9 கான்கிரீட் தடுப்பணைகள், 76 சிமெண்ட் கான்கிரீட் சாலைகள், 15 சிறு பாலங்கள், உணவு தானிய சேமிப்பு கிடங்கு, 2 சமையலறைக்கூடங்கள், 43 ஊராட்சி மன்ற அலுவலகங்கள், 31 பேவர் பிளாக் சாலைகள், 2 பள்ளி சுற்றுச் சுவர்கள், 13 ஓரடுக்கு கப்பிச் சாலைகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் சார்பில், மீன் உளர்த்தும் முற்றம், உணவு தானிய சேமிப்புக் கிடங்கு, 47 கதிரடிக்கும் களம், 26 அங்கன்வாடி கட்டடங்கள், 34 ஊராட்சி மன்ற அலுவலகங்கள், 14 நியாயவிலைக் கடைகள், 14 குளங்கள்/ஊருணிகள் புணரமைத்தல், 6 தெருவிளக்குகள், 106 சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் மற்றும் சிறு பாலங்கள், 71 பேவர் பிளாக் சாலைகள், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பில், 50 சாலைகள், என 258 கோடியே 27 இலட்சம் 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 6789 புதிய திட்டப் பணிகள்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ஆவடி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 32 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 498 தார் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள், ஆவடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 18 கோடியே 70 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 231 தார் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள், ஆவடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சேக்காடு உரக்கடிலில் 5 கோடியே 67 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வள மீட்பு மையம், 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மிட்டனமல்லி ஏரிக்கரையை பலப்படுத்துதல் மற்றும் Bund உருவாக்குதல் மற்றும் பேவர் பிளாக் பதித்தல், 51 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரெட்டிப்பாளையம் பகுதியில் விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாடு மையம், ஆவடி மாநகராட்சி எல்லைக்குட்பட்டப் பகுதிகளில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் 3 கோடியே 78 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பராமரிப்பு மற்றும் சீரமைக்கும் பணிகள்.
திருவேற்காடு பகுதியில் 10 கோடியே 43 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 97 சாலைகள், 25 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பொறியியல் மற்றும் பொதுசுகாதாரத்திற்கு தேவையான பொருட்கள் வைக்க பாதுகாப்பு அறை அமைக்கும் பணிகள், 1 கோடியே 95 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்வாய், திருவள்ளூரில் 4 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 55 சாலைகள், பூந்தமல்லியில் 2 கோடியே 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 19 சாலைகள், திருத்தணியில் 13 கோடியே 23 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 186 சாலைகள், பொன்னேரியில் 1 கோடியே 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 14 சாலைகள், திருநின்றவூரில் 13 கோடியே 72 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 192 சாலைகள்; மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம், பேரம்பாக்கத்தில் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார அலகு
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், அத்திப்பட்டு, காட்டுப்பள்ளி மற்றும் வல்லூர் ஆகிய ஊராட்சிகளுக்கு 4 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வசதிகள்; தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் திருவொற்றியூரில் 6 கோடியே 18 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையக் கட்டடம், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் பொன்னேரியில் 2 கோடியே 73 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சார்பதிவாளர் அலுவலகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மீஞ்சூரில் 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடம், மாவட்ட ஆட்சியரின் பெருந்திட்ட வளாகத்தில் 3 கோடியே 33 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், போக்குவரத்துத் துறை சார்பில் 2 கோடியே 29 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பூங்கா, 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் படிப்பகம்; என மொத்தம், 390 கோடியே 74 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 7369 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய விவரங்கள்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 63,124 பயனாளிகள் பயன்பெறும் வகையில் பட்டாக்கள், முதலமைச்சரின் விபத்து நிவாரண திட்டத்தில் உதவிகள், ஆதரவற்ற விதவை சான்றிதழ்கள், பழங்குடியினர் சான்றிதழ்கள், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 30,202 பயனாளிகள் பயன்பெறும் வகையில் மகளிர் சுயஉதவிக்குழு வங்கிக் கடன்கள், ஐஸ் பெட்டிகள், வட்டார வணிக வள மையம், சமுதாய முதலீட்டு நிதி, நலிவுற்றோர் நல நிதி ஆகிய திட்டத்தில் நிதியுதவி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 1000 பயனாளிகளுக்கு பசுந்தாள் விதைகள் விநியோகம், தெளிப்பான்கள் விநியோகம் போன்ற திட்டங்களில் உதவிகள், வேளாண் பொறியியல் துறை சார்பில் 200 பயனாளிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட்டுகள், சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் வழங்குதல், கூட்டுறவுத் துறை சார்பில் 3208 பயனாளிகளுக்கு கடன் உதவித் தொகை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 32,636 பயனாளிகள் பயன்பெறும் வகையில் இலவச தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள், முஸ்லீம் மற்றும் கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு தொழில் தொடங்கிட உதவிகள், கிறித்துவ உபதேசியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் அடையாள அட்டைகள் வழங்குதல்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 56,426 பயனாளிகள் பயன்பெறும் வகையில் நலவாரிய அட்டைகள் வழங்குதல், பெண் கல்வி ஊக்கத்தொகை, இலவச தையல் இயந்திரங்கள், பழங்குடியின பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி, முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம், நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களில் உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1432 பயனாளிகள் பயன்பெறும் வகையில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், காதொலி கருவிகள், உயர் ஆதரவு தேவையுடைய பாதுகாவலருக்கு உதவித்தொகை, பராமரிப்பு உதவித் தொகை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 1471 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 357 கோடியே 43 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,02,531 பயனாளிகளுக்கு வழங்கினார்.
The post திருவள்ளூரில் ரூ.1166.32 கோடி மதிப்பிலான 6760 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 7369 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.