சென்னையில் 4-வது ரயில் முனையத்தை பெரம்பூர் – வில்லிவாக்கம் இடையே அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில், அதை திருவள்ளூர் அருகே அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய 3 இடங்களில் ரயில் முனையம் அமைந்துள்ளது. இந்த நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தினசரி சுமார் 5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். பல முக்கிய நகரங்களில் இருந்து சென்ட்ரல் வரும் ரயில்கள் பெரம்பூர் தாண்டி உள்ளே வருவதற்கு மிகவும் தாமதமாகிறது.