பிரபல இயக்குநர் குவன்டன் டொரன்டினோவிடம் இருந்து ‘அனோரா’ இயக்குநர் சீன் பேக்கர் விருதைப் பெற்றார். சிறந்த நடிகை விருதைப் பெற்ற மைக்கி மேடிசன், குவன்டன் டொரன்டினோவின் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய சீன் பேக்கர், “மைக்கி மேடிசனை நீங்கள் நடிக்க வைக்காவிட்டால் ‘அனோரா’ இருந்திருக்க மாட்டார்" என்று டொரன்டினோவிடம் சொன்னார். பின்னர் பேசும்போது, “ஒரு சுயாதீனப் படத்தை அங்கீகரித்ததற்காக அகாடமி வாக்காளர்களுக்கு நன்றி. நாம் திரையரங்குகளில் படம் பார்த்துதான் அதன் மீது காதல் கொண்டோம். பார்வையாளர்களுடன் அங்கு படம் பார்ப்பது சிறந்த அனுபவம்.