மதிமுக பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுடனான மோதல் காரணமாக, கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார். இந்த பரபரப்பான சூழலில் இன்று கூடும் மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021 அக்டோபர் மாதம் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்கெடுப்பு அடிப்படையில் கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர் அவர் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, மதிமுக இளைஞரணி செயலாளராக இருந்த கோவை ஈஸ்வரன், அவைத் தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி ஆகியோர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.