சென்னை: கடன் வசூலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் காவல் துறை – தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சங்கரன் (45). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டை அடகு வைத்து 2020 ஆண்டு ரூ. 5 லட்சம் கடன் பெற்றுள்ளார். பெற்ற கடனை அடைப்பதற்கு மாதந்தோறும் ரூ. 11 ஆயிரம் வீதம், நிதி நிறுவனத்துக்கு தவணை தொகை திருப்பி செலுத்தி வந்துள்ளார். இடையில் ஏற்பட்ட வாழ்க்கை நெருக்கடி காரணமாக முறையாக தவணை செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.