
மும்பை: தென் ஆப்பிரிக்க அணி உடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்திலிருந்து மீண்டுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இடம்பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், புதன்கிழமை அன்று இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.

