சியோல்: தென் கொரியா இரண்டாவது நாளாக கடுமையான பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரியாவில் இரண்டாவது நாளாக இன்றும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டடுள்ளது. இதனால் அந்நாட்டில் வசிக்கும் மக்கள் வீட்டைவிட்டுகூட வெளியே வராமல் சிக்கி தவித்து வருகின்றனர். விமான சேவையுடன், போக்குவரத்து சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடும் குளிர் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.