தெலங்கானாவில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒடிசா மாநிலம், ராயகடா பகுதியை சேர்ந்த 20 தொழிலாளர்கள் வேலைக்காக ஒரு பேருந்தில் ஹைதராபாத் நோக்கி புறப்பட்டனர். இவர்களின் பேருந்து நேற்று அதிகாலையில் தெலங்கானாவின் சூர்யாபேட்டை மாவட்டம், ஐலாபுரம் பகுதியில் வரும்போது, சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் அதிக வேகத்தில் மோதியது. இந்த கோர விபத்தில் 4 பேர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். 16 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சூர்யாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து சிவம்லா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.