தெலுங்கில் அனுஷ்காவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ளார். யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டி’. க்ரிஷ் இயக்கியுள்ள இப்படத்தில் அனுஷ்கா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் டீசருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏப்ரல் 18-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
தற்போது இப்படத்தில் விக்ரம் பிரபு நடித்திருப்பது உறுதியாகி இருக்கிறது. இதில் டெசி ராஜு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக புதிய போஸ்டருடன் படக்குழு அறிவித்திருக்கிறது. இன்று விக்ரம் பிரபு பிறந்தநாள் என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பின்னர், வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிடவுள்ளது.