சென்னை: பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்தல் என்ற பெயரில் எந்த நிகழ்ச்சியையும் தனியார் பள்ளிகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 3156 அரசு மேனிலைப் பள்ளிகள், 3094 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், தனியார் பள்ளிகள் சுமார் 6 ஆ்யிரம் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் படிக்கின்ற மேனிலை வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் பேர், 10ம் வகுப்பில் சுமார் 7.50 லட்சம் பேர் பொதுத் தேர்வுகளை எழுதும் நிலை உள்ளது. பொதுத் தேர்வுகளின்போது, தனியார் பள்ளில் படிக்கும் மாணவ மாணவியர் தேர்வு எழுதச் செல்வதற்கு முன்னதாக தங்களின் பெற்றோருக்கு பாதை பூஜை செய்வது என்ற ஒரு நிகழ்வு பல மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது.
இதனால் மாணவ மாணவியர் மன நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே அந்த நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி, பெற்றோருக்கு பாத பூஜை என்ற பெயரில் எந்த நிகழ்வுகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பாதை பூஜை செய்வது என்ற ஒரு நிகழ்வு பல மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. இதனால் மாணவ மாணவியர் மன நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே அந்த நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்
The post தேர்வு நேரத்தில் பெற்றோருக்கு பாத பூஜை தனியார் பள்ளிகளுக்கு அரசு தடை உத்தரவு appeared first on Dinakaran.